Back to blog

13 June 2026

நுணுக்கம் அறியும் Dr R.Suresh Kumar

By ALP Astrology

நுணுக்கம் அறியும் நுட்பம் கண்டு நாளை என்பதை இன்றே காட்டி இன்னல் அகற்றி இன்பம் கூட்டும் வழி வகையாய் வடித்தெடுத்த வரம்... ALP

அதிகாலை வேளையிலே ஆதவனும் தூங்கையிலே இருவார வகுப்பினிலே பரிவார குருகுலமாய் இல்லத்தில் இருந்தபடி இருகப்பிடிக்கும் வாத்தியார் நீ...

தொழில் ரகசியம் என தோளில் சுமக்காமல் எழில் வடிவமாய் செயலியில் தந்து பாமரனையும் ஜோதிடனாக்கும் பரந்த மனம் கொண்ட பரோபகாரி நீ...

ரத்தினங்களை ஜோதிடமாக்கும் இக்காலத்தில் ஜோதிடத்தின் ரத்தினமாய் திகழ்ந்து..

இருள் விலக்கி வெளிச்சம் காட்டும் கலியுகத்து கலங்கரை விளக்கம் நீ....

பாரம்பரிய பஞ்சாங்கத்தை காலக்கண்ணாடியாய் கைப்பேசியில் தந்து நச்சென்று கணித்திடும் மாயத்தை நயமாய் விளக்கிடும் சாமானியனின் நண்பன் நீ..

கலியுகத்தின் கர்மக் கரத்தில் கதிகலங்கி கரை தேடி கண்டெடுத்தேன் பொக்கிஷத்தை பொதுவுடையின் அறுவடையாம் அட்சய லக்ன பத்ததியை...

தளபதிகள் பலர் கொண்டு தலைமையாய் நீ நடத்தும் ALP ராணுவத்தில் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

சிப்பாயாய் நான் இன்று...

-இரா. சுரேஷ் குமார்

என்றென்றும் நன்றியுடன்....

--> --> --> Dr R.Suresh Kumar

Chat with us