Back to blog

13 June 2026

கடனை அடைப்பதற்கு என்ன வழி? வாக்கு யோகி. உயர்திரு. Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ALP Astrology

By ALP Astrology

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், ஆன்மீக Glitz சார்பாக, அட்சய இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அட்சய லக்ன பத்ததியின் தந்தை. வாக்கு யோகி. உயர்திரு. Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் இருந்து, சில துளிகள்.

வணக்கம் ஐயா.என் பெயர் மகாலட்சுமி.

கடனை அடைப்பதற்கு என்ன வழி?

ஐயாவின் பதில்:

கடன் என்றதும் எல்லோரும் பயப்படுறாங்க. எதற்காக வாங்கியிருப்பாங்க?

வீடு கட்டுறதுக்கு, இடம் வாங்குவதற்கு, படிக்க வைக்க கடன் வாங்குறோம்.

இது கடனா? தயவு செய்து, இதை கடன் என்று சொன்னால் அது பொய்.

இது ஒரு வகை முதலீடு தானே. www.alpastrology.org

இங்க பணத்தை வாங்குறீங்க. நான் இங்க ஒரு வீடு வாங்குனேன். இங்க பணத்தை வாங்குறீங்க, இங்க ஒரு இடம் வாங்குனேன். பணத்தை வாங்கி பிள்ளையை படிக்க வைத்தேன். இது கடனென்று தயவு செய்து சொல்லாதீங்க. இப்படி ஒரு நினைப்பு வந்தாலே, நமக்கு என்ன பண்ணும்னா, முழுமையாக ஆகுமா என்று கேட்டால் ஆகாது.

ஏதோ ஒரு கடன் வந்துச்சு என்றாலே, நம்மை அறியாமலேயே பீல் பண்ண ஆரம்பிச்சுருவோம். நிறைய பேரு என்ன பண்றோம்னா, கடன் வருதுன்னு. கடன் இருக்கு என்று நினைக்கிற நாம், இந்தக் கடனை அடைக்கிறதுக்கு, இந்த வருமானத்தை பெருக்கணும்னு நாம் நினைக்கவே மாட்டோம் என்கிறோமே. அதான் ஆச்சரியமாக இருக்கு.

அது தான் ஜோசியத்தில் சொல்றோம். இந்த வருமானத்தை பெருக்கினோம்னா, இந்த பக்கம் ஒரு நல்ல பெரிய அளவுல வருமானம் வந்துச்சு என்று வச்சுக்கோங்களேன், இந்த கடன் இப்படி (இறங்கி) போய்டும்.

ஆனால், நாம் கடன் இருக்கு, கடன் இருக்கு, கடன் இருக்குன்னு சொன்னா, இந்தக் கடனைத் தான் மேல தூக்கிக்கிட்டு போகிறோம். எல்லோருமே அதை விட்டு தயவு செய்து கடன் இருக்குனு சொல்லாதீங்க, அதை முதலீடு என்று சொல்லுங்க. என்னுடைய பார்வையில் அது முதலீடாகத் தான் இருக்கு.

இப்ப நான் ஒரு மருத்துவ செலவு பண்றேன், அது வீண். மருத்துவ செலவு பண்ணேன், அதுக்காக கடன் வாங்கினேன், அதுக்காக விரைய செலவு இருக்கு. இது வந்து நம்ம எதிர்பார்க்காத விரயச்செலவுகள். தயவு செய்து, இப்பவும் சொல்றேன், இது எதிர்பார்க்கவே மாட்டோம், அது ஒரு விஷயம். www.alpastrology.com

இப்ப நான் ஒரு வீடு வாங்கினேன், ஒரு இடம் வாங்கினேன், ஒரு கார் வாங்கினேன், ஒரு பைக் வாங்கினேன், இதுக்கு எல்லாமே முதலீடு இருக்கே. பொருள் இருக்கே. அது எவ்வளவு தான் அந்த பணத்தோட வீக்கம் கம்மியாக இருந்தாலும் கூட, நான் ஒரு இருபது லட்சத்துக்கு வாங்கினேன், இங்க ஒரு 18 லட்சம் தான் போகுது காரு. மற்றும் இங்க ஒரு 25 லட்சம் கார் வாங்கினேன், 15 லட்சம் தான் கார் போகுது என்று விலை குறைந்தாலும் கூட, இந்த 15 லட்சத்துக்கு ஒரு முதலீடு இருக்குல்ல, அதுவே உங்களுக்கு முதலீடு.

இந்தக் கடன், முதல் விஷயம் என்ன அப்படின்னா புரிஞ்சுக்கணும். கடனைப் பற்றி புரிஞ்சுக்கிட்டா தான், நீ கடனுக்கான விஷயத்தை தூக்க முடியும். அப்ப நம்ம எதுக்காக கடன் வாங்குறோம்? அது, எவ்வளவு தூரம் போகும், அப்படின்னு பார்த்து முடிவு பண்ணனும்.

நன்றி.

என்றென்றும் நன்றியுடன்....

--> --> --> ALP Astrology

Chat with us