12 June 2026
ஜோதிடம் பார்ப்பதன் மூலம் என்னுடைய பிரச்சனைகளுக்கு ஒரு வழி கிடைக்குமா ? | ALP ASTROLOGY ALP Astrology
By ALP Astrology
Full Video Link: https://youtu.be/shmX3jTZlbE?si=vGMVUoA0HgMw1zSg
ஜோதிடம் பார்ப்பதன் மூலம் என்னுடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்பது பற்றி, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் விளக்கம்.
~ ALP ஸ்ரீ குரு. பவானி முத்துசாமி, ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது இல்லாதவர்கள் இல்லை என்கின்ற அளவிற்கு, ஏதோ ஒரு வகையில் எல்லோரும் பாதிப்பை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி பார்க்கும் போது, எல்லாவற்றிற்கும் மனதில் வரும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஜோதிடம் பார்க்கலாம். நமக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அதிலும் ALP ஜோதிட முறை என்பது ரொம்ப துல்லியமாக சொல்லக் கூடியது. அவர்களுக்கு எவ்வளவு கால கட்டம் வரை, இந்தப் பிரச்சனைகள் இருக்கும். எப்போது சரியாகும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். www.alpastrology.org
அப்படித் தெரிந்து கொள்ளும் போது, எல்லோரும் கேட்கும் முதல் விஷயம், இதற்கு என்ன பரிகாரம். பரிகாரம் செய்தவுடன் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்றால், கண்டிப்பாக இங்கு யாருமே பிரச்சனையோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும் மாற்றி விட்டு, எல்லாருக்கும் என்னென்ன வேணுமோ, அதை எல்லாவற்றையும் நாம் அனுபவிக்க முடியும்.
ஆனால், நம்மை படைத்த கடவுள், நமக்கு எது எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதெல்லாம் நாம அனுபவிக்கிறதுக்கும் அதுக்குள்ள விதிகளை வைத்துத் தான் நமக்கு ஜாதகத்தை படைத்திருக்கிறார்.
அப்படிப் பார்க்கும் போது, நம்ம ஜாதகத்துல ALP முறையை கண்டுபிடித்த பொதுவுடமைமூர்த்தி ஐயா அவர்கள், இரண்டு விதமாக பிரித்துள்ளார்கள். விதி, மதி என்று. நமக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் வரக்கூடும். விதியால் ஏற்படக் கூடிய பிரச்சனை மதியால் ஏற்படக்கூடிய பிரச்சனை.
விதியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு, தீர்வுகள் என்பது நாம் அதை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். நாம் அதற்கு பரிகாரம் செய்தாலும், அது நம் திருப்திக்காக செய்யலாமே தவிர, அதற்கு உண்டான தீர்வுகள் என்பது கண்டிப்பாக இருக்காது. www.alpastrology.com
அதுவே மதியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் எனும் போது, நமக்கு நாமே ஏற்படுத்தக் கூடிய பிரச்சனை. யார் ஜாதகரோ, அவர் தான் அந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பார். அப்போ அவர் தன்னை சரி செய்து கொண்டால், அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கான பரிகாரம் செய்யும் போது கண்டிப்பாக அவருக்கு அந்த பிரச்சனையிலிருந்து விடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு ஜாதகர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர். அவரோட ஜாதக அமைப்புல கன்னி லக்னம் ஹஸ்தம் -3 ஆம் பாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு இரண்டாம் அதிபதியான சுக்கிர பகவான், கோச்சாரத்தில் ஒரு மாதம் அவருடைய லக்னத்திற்கு எட்டாம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அந்த ஒரு மாத காலம், அவருக்கு எப்படி இருந்தது என்றால், அவருக்கு பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு விருப்பமில்லை.
ஒரு கதவை சாத்திக்கொண்டு, அறைக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, படிக்கப் போவதற்கு விருப்பமில்லை, தான் போக விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார். பள்ளிக்கூடத்தில் அவருக்கு எல்லாம் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றனர். ஏனென்றால் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பதால், அவர் படிப்பு மீது அக்கறை எடுத்துக் கொண்டு சொல்கின்றனர். ஆனால் இவர் போக விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டு, ஒரு மாத காலம் வெளியில் வரவே இல்லை.
அப்போது அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மலர் மருந்து என்று தீர்வு கேட்ட போது, நாம் அவருக்கு கொடுத்தோம். அவருக்கு அது வேலை செய்தது என்றால் அவருக்கு பிரச்சனை என்பது விதியில் கிடையாது, மதியில். ஏனென்றால் அவருடைய லக்னத்திற்கு தான் இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தால். அவரே தான் ஒரு பிரச்சனைக்கு காரணமே தவிர, அவருக்கு படிப்பு என்பது பிரச்சனை இல்லை. அதனால் அவருக்கு அந்த விஷயம் கொடுத்தோம். அவர் மறுபடியும் பள்ளிக்கூடத்திற்கு போக ஆரம்பித்தார். எல்லா எக்ஸாம்ஸும் எழுதி, இன்றைக்கு எக்ஸாம் ரிசல்ட் வந்தது, நல்லபடியாக எழுதி முடித்து விட்டார்.
அதனால் யாரெல்லாம் பரிகாரம் கேட்கிறீர்களோ, ALP ஜோதிடரிடம் இதற்கு நிஜமாக பரிகாரம் செய்தால் சரியாகுமா, இல்லை நான் இந்த விஷயத்தை கடந்து தான் போக வேண்டுமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் பரிகாரம் மட்டுமே எல்லாம் செய்து கொடுத்து விடும் என்று நினைக்கிறீர்கள். அப்படிக் கிடையாது.
ALP ஜோதிட முறையில், மிகவும் துல்லியமாக எங்களுடைய குருநாதர் கணித்து வைத்திருக்கிறார்கள். எது எல்லாம் நாம் சரி செய்து விட முடியும், எது எல்லாம் நாம் விதிப்படி அனுபவித்தாக வேண்டும், என.
இந்தத் தகவலை இன்றைக்கு உங்களுக்கு நான் சொல்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நன்றி.
என்றென்றும் நன்றியுடன்....
--> --> --> ALP Astrology


