11 June 2026
அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம் மூலம், எளிமையாக ஜோதிட பலன் பார்ப்பது எப்படி? ALP ஜோதிடர். C.K. சத்திய நாராயணன். ALP Astrology
By ALP Astrology
அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம் மூலம், எளிமையாக ஜோதிட பலன் பார்ப்பது எப்படி? CLICK LINK 👉 https://youtu.be/UlNtiqmivyI?si=F7JqpSWGLxeYjwQH
அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் பாத்தீங்கன்னா ஒரு சிம்பிளான ரூல்ஸ், சிம்பிளான விஷயங்கள், இருக்கு.பாத்தீங்கன்னா, ஒரே ஒரு கிரகத்தை வச்சு, ரெண்டு கிரகத்தை வச்சு, இது மாதிரி சிம்பிளான ரூல்ஸ் எடுத்தீங்க அப்படின்னாலே இந்த பலன் அப்படிங்கிற விஷயம் வந்து துல்லியமா வந்துரும்னு சொல்லலாம். ஏன்னா நம்ம வந்து என்ன பண்ணுவோம்னா, நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிப்போம். நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிக்கிறதுனால, நிறைய குழப்பமான மனோநிலை வரும்னு சொல்லலாம். அப்போ ஒரு சிம்பிளான ஒரு விஷயங்களை வந்து நிறைய விஷயத்தை மாற்றக்கூடிய தன்மை இருக்கிறது அப்படின்னு சொல்லலாம். அப்போ ஏதாவது ஒரு ரோடு போடணும் அப்படின்னு சொன்னா, எல்லா மினிஸ்டரும் பாக்கணும்னு அவசியம் கிடையாது. அந்த PWD மினிஸ்டர் மட்டும் பார்த்தா போதும். அதே மாதிரி எல்லா கிரகங்களையும் போய் பாக்கணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அப்படிங்கிறது முக்கியமான விஷயம்.
இப்போ இந்த ஜாதகர் வந்து பாத்தீங்கன்னா, நண்பர் தான் இவரு. ஆக்சுவலா இவருடைய ஜென்ம லக்னம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா கும்ப லக்னம். ஜாதகம் வழியாதான் அவர் நண்பர் ஆனார்னு சொல்லலாம். இப்ப ALP லக்னம் போயிட்டு இருக்கிறது பாத்தீங்கன்னா பரணி நட்சத்திரம் 1 ஆம் பாதம். பரணி நட்சத்திர அதிபதி எங்க இருக்காரு மூன்றாம் இடத்தில இருக்கார். நல்லா இருக்காரா அப்படின்னா நல்லா இருக்கார். ஆனா இங்க இருக்க ALP லக்னத்திற்கு இங்க இருக்கிற சந்திரனுடைய அமைப்பு இருக்குல்ல அந்த சந்திரனுடைய அமைப்பு வந்து வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துல பிரச்சனையை கொடுக்குது அப்படின்னு சொல்லலாம். அவர் கேட்ட கேள்வி வந்து எனக்கு எப்ப சார் வேலை கிடைக்கும்? எப்போ எனக்கு வந்து வேலையில் குழப்பமான மனநிலை இருக்கு எப்ப மாற முடியும்? கேட்டார். இவருடைய குழப்பத்திற்கு காரணமே இந்த வேலைதான். அப்போ இந்த சந்திரன் வந்து ALP லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடிய அமைப்பு வந்து ஒரு குழப்பமான மனோநிலையை ஏற்படுத்தும். யாருக்கு அப்படின்னா? இந்த ஜாதகருக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். இந்த குழப்பங்கள் சந்திரன்னா மனோ காரகன்னு சொல்லுவோம் இல்லையா. இரட்டை தன்மை உள்ள கிரகங்கள் அப்போ இந்த ALP லக்கினத்திற்கு சந்திரன் இங்க இருக்கிற அமைப்பு அதாவது சிம்மத்தில் சந்திரன் இருக்கிற அமைப்பு இந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு பிரச்சினை கொடுக்கிறது என்று சொல்லலாம். எப்படி சார் வேலை? வேலைன்றது என்னது பத்தாம் பாவம். பத்தாம் பாவத்துக்கு இந்த சந்திரன் எங்க இருக்காரு அப்படின்னா எட்டாம் இடத்தில் இருக்காரு அப்போ இந்த மாதிரி மனக்குழப்பம் அப்படிங்கிற விஷயமே வந்து பாத்தீங்கன்னா இந்த ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துல வந்து அந்த அளவுக்கு ஒரு வெற்றி பெற முடியாத சிட்டுவேஷன்ல இருக்கு அப்படின்னு நாம சொல்லலாம். அதனால நாம என்ன பண்ணனும் அப்படின்னு பாத்தீங்கன்னா ஒரே ஒரு கிரகத்தை வச்சு ரெண்டு கிரகத்தை வச்சு பலன் சொல்ல முடியுமா அப்படின்னு பார்த்தீங்கன்னா அட்சய லக்ன பத்ததியில் மட்டும்தான் இப்படி பலம் சொல்ல முடியும் அப்படிங்கிறத ஆணித்தரமா சொல்லலாம்.
இந்த மாதிரி நீங்க பலன் வந்து சொல்றதுக்கு நீங்க தகுதி ஆகணும்னு நீங்க நினைக்கிறீங்களா? அட்சய லக்ன பத்ததி வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் துவங்குகின்றது. அதனால இந்த மாதிரி பலன் சொல்லணும்னு நீங்க நினைச்சீங்கன்னா இந்த வகுப்பில் சேர்ந்து நீங்க பயன் பெறலாம்.
நன்றி. வணக்கம்.
என்றென்றும் நன்றியுடன்....
--> --> --> ALP Astrology


